வரிஞ்சு கட்டிய சேலையும்
காதில் ஆடும் தண்டட்டியும்வாயில் ஊறும் போயிலையும்
நெத்தி நிறைஞ்ச குங்குமமுமாய்...
வாக்கா வரப்பு சண்டையில
இப்பவும் முதலிடம்தான்...
சண்டைக்குன்னு போனா
சரமாரி 'அந்த' சொல்லுதான்...
அதுக்குப் பயந்தே
அப்பத்தாகிட்ட வாய் கொடுக்க
பயப்படும் ஊருசனம்...
களவாணிப்பய... கிறுக்குப்பய...
ரெக்க மண்டை... விசுக்கான்...
அப்பத்தாவின் அடைமொழிகள்...
பேரனை மட்டும் செல்லமாய்
தீவட்டித்தடியன்...
ஐயா முடியாம விழுந்தப்ப
போயி சேராம
வதையை வாங்குது....
என்று பேசினாலும்...
இப்பல்லாம் அப்பத்தா
யாரோடும் சண்டையிடுவதில்லை...
பட்டப்பெயர் பயன்படுத்துவதில்லை...
முகத்தில் கவலை ரேகைகள்...
தன்னை தவிக்கவிட்டுட்டு
மகாராஜன் போயிடுவாரென்றா..?
இப்படியே அவரவிட்டுட்டு
நாம போயிடுவோமென்றா...?
யாராலும் அறியமுடியவில்லை
அப்பத்தாவின் மனசை..!
-'பரிவை' சே.குமார்
25 comments:
அப்பத்தாவை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.
அப்பத்தா தன் இயல்பை மாற்றிக் கொண்டதும் யாருக்கும் ரசிக்கவில்லை பாருங்கள். என்ன சோகமோ என்ற கவலைதான் எழுகிறது.
நல்ல கவிதைங்க.
பொருத்தமான படம். எப்படிக் கிடைக்குதுங்க?
கவிதை படிக்கும் போதே காட்சி கண்களில்....
அருமை குமார்.... ! கலக்கீட்டீங்க....வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்
//தன்னை தவிக்கவிட்டுட்டு
மகாராஜன் போயிடுவாரென்றா..?
இப்படியே அவரவிட்டுட்டு
நாம போயிடுவோமென்றா...?//
அப்பத்தா, ரொம்ப பாதிப்ப ஏற்படுத்திட்டாங்க போல!
நெகிழ்வா இருக்கு
என் அம்மம்மாவை ஞாபகப்படுத்திவிட்டீங்கள் குமார்.படமும் அருமை.
ராமலக்ஷ்மி said...
//அப்பத்தாவை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.
அப்பத்தா தன் இயல்பை மாற்றிக் கொண்டதும் யாருக்கும் ரசிக்கவில்லை பாருங்கள். என்ன சோகமோ என்ற கவலைதான் எழுகிறது.
நல்ல கவிதைங்க.//
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க...
அப்பத்தா கவலை அவருக்கு... நம்ம கவலை நமக்கு.
ராமலக்ஷ்மி said...
//அப்பத்தாவை அப்படியே கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.
அப்பத்தா தன் இயல்பை மாற்றிக் கொண்டதும் யாருக்கும் ரசிக்கவில்லை பாருங்கள். என்ன சோகமோ என்ற கவலைதான் எழுகிறது.
நல்ல கவிதைங்க.//
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க...
அப்பத்தா கவலை அவருக்கு... நம்ம கவலை நமக்கு.
ராமலக்ஷ்மி said...
//பொருத்தமான படம். எப்படிக் கிடைக்குதுங்க?//
எல்லாம் வலையில அலசிப் பிடிக்கிறதுதான். அப்பத்தாவுக்கா மூணு நாள் காலையில அலசி இன்னைக்குத்தான் பிடிச்சேன்.
தமிழரசி said...
//கவிதை படிக்கும் போதே காட்சி கண்களில்....//
நன்றி தமிழரசி.
dheva said...
//அருமை குமார்.... ! கலக்கீட்டீங்க....வாழ்த்துக்கள்!//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தேவா. விடுமுறையில் உங்க பக்கம் வருகிறேன்.
A.சிவசங்கர் said...
//வாழ்த்துக்கள்//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சிவசங்கர். விடுமுறையில் உங்க பக்கம் வருகிறேன்.
சத்ரியன் said...
//தன்னை தவிக்கவிட்டுட்டு
மகாராஜன் போயிடுவாரென்றா..?
இப்படியே அவரவிட்டுட்டு
நாம போயிடுவோமென்றா...?//
//அப்பத்தா, ரொம்ப பாதிப்ப ஏற்படுத்திட்டாங்க போல!//
வருகைக்கும் ரசனைக்கும் நன்றி. அப்பத்தா நமக்கு அவ்வளவா பாதிப்பை ஏற்படுத்தலை. இதுபோல நிறைய அப்பத்தாக்கள் உண்டு.
சின்ன அம்மிணி said...
//நெகிழ்வா இருக்கு//
நன்றி முதல் வருகைக்கும் தங்கள் நெகிழ்ச்சிக்கும்..!
ஹேமா said...
//என் அம்மம்மாவை ஞாபகப்படுத்திவிட்டீங்கள் குமார்.படமும் அருமை.//
வருகைக்கும் கருத்துயக்கும் நன்றி ஹேமா.
உங்கள் ஞாபகக் குளத்தில் என் கவிதை பூ எறிந்ததி எனக்கு சந்தோஷமே.
நன்றி.
//Hi shruvish,
Congrats!
Your story titled 'நெடுங்கவிதைகள் : அப்பத்தா' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 21st April 2010 06:56:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/229910
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team//
வாக்களித்து பிரபல பதிவாக்கிய நண்பர்களுக்கும் வாய்ப்பளித்த தமிழிஷ்க்கும் நன்றி.
அருமை நண்பரே.
இயல்பான கிராமத்து வார்த்தைகள் உங்களிடம் வசப்பட்டுக் கிடக்கிறது.
நம்ம கிராமத்துப் பயபுள்ளைக பேச்சுவீச்சு!
நல்ல கவிதை! தேவகோட்டை நண்பரே!
நல்ல கவிதை!வாழ்த்துக்கள்!!
@நாடோடி இலக்கியன் said...
//அருமை நண்பரே.
இயல்பான கிராமத்து வார்த்தைகள் உங்களிடம் வசப்பட்டுக் கிடக்கிறது.//
நன்றி இலக்கியன்.
@அண்ணாமலை..!! said...
//நம்ம கிராமத்துப் பயபுள்ளைக பேச்சுவீச்சு!
நல்ல கவிதை! தேவகோட்டை நண்பரே!//
நன்றி நண்பரே...!
@ Priya said...
//நல்ல கவிதை!வாழ்த்துக்கள்!!//
நன்றி பிரியா.
அப்பத்தாவா அல்லது அப்பாத்தாவா
ஒன்றுமே தெரியவில்லையே.
அப்பத்தாக்களின் அடையாளம்:
கிராமத்து அப்பத்தாக்கள் எப்போதுமே அழகு. அதிலும் அவர்கள் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் சுருக்குப் பைகள் அதைவிட் அழகு.
இறையழகன்
Post a Comment