பேப்பரில் பேனா
முத்தமிட்டதில்
பிரசவித்தது
உன் பெயர்தானடி..!
நித்தமும் நினைவுகளில்
நீந்தும் நீ கனவிலும்
என் கண்களில்..!
சாக்லேட் கிடைத்தால்
சந்தோஷப்படும்
குழந்தையைப் போல்
உன் தரிசனத்தில்..!
இரயில் பயணத்தில்
அருகருகே இருந்தும்
இணைகோடுகளாய்..!
கோயிலில் நீ
ஏற்றிய நெய்தீபம்
யாருக்காக என்பதை
தீபம் அறியும்..!
உன் வேண்டுதல்
உனக்கானதில்லை
என்பதை அந்த
தில்லை நாயகன்
அறிவானோ..?
நீ மூன்றாம் பிறையாய்
உயிருக்குள்...
பௌர்ணமியும்
அமாவாசையும்
உயிர்ப்பதில்லை..!
சீதை...
அகலிகை...
கண்ணகி...
தமயந்தி...
பாஞ்சாலி...
எல்லாம் வரலாறாய்..!
நீ வாழ்க்கையாய்..!
-'பரியன் வயல்' சே.குமார்.
3 comments:
காதல் வசப்பட்ட மனசின் ரசனைக்கு எல்லையே இல்லை என்பது தெளிவாகிறது கவிதையில்.....
//சீதை...
அகலிகை...
கண்ணகி...
தமயந்தி...
பாஞ்சாலி...
எல்லாம் வரலாறாய்..!
நீ வாழ்க்கையாய்..!//
குமார்,
“வீட்டுல” ப்ளோக் படிக்கைறது உண்டா?
ம்ம்ம்... ’தீப’நினைவுகள் சுடுவதில்லை.
கவிதைகளின் தலைக்காவிரி...
உள்ளுணர்வு,
உணர்வின் வெளிப்பாடு,
பார்த்தது,
படித்தது,
கேட்டது,
‘பட்டது’ .... இங்கிருந்துதான் துவங்குகிறது.
மற்றபடி ”கேள்விகளாய்” வரும் பின்னூட்டங்கள் வெறும் கலாய்ப்புதான் தோழா.
Post a Comment