பூப்பெய்து விட்டேனாம்
புதிதாக முளைத்தன
சட்டங்கள்...உள்ளாடை தேடும் தம்பி
என்னிடம் கேட்பது போல்
அவனிடம் கேட்டால்
கடிந்து கொள்கிறாள் அம்மா..!
வீட்டிற்கு வரும்
ஆண்களிடம் பேசினால்
சென்ற பிறகு
திட்டுகிறார் அப்பா..!
தெருவில் செல்ல...
தோழியைக் காண...
ஏகப்பட்ட கெடுபிடிகள்..!
திருவிழா, மணவிழா...
எந்த விழாவானாலும்
சொந்த ஊருக்கு செல்ல
சொல்லமுடியா கெடுபிடிகள்...
கெடுபிடிகளின் மத்தியில்
தூண்டில் மீனாய் நான்...
மனதிற்குள் வருந்துகிறேன்
ஆணாக பிறந்திருக்கலாமோ..?
-சே.குமார்
No comments:
Post a Comment